×

டெல்லியில் தினமும் ஒரு விவசாயி விஷமருந்தி தற்கொலைக்கு முடிவு நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

திருச்சி, ஜன.30: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க  மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் 100 பேர் டெல்லி சென்று வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி தினம் ஒருவர் விஷமருந்துவது என முடிவு செய்யப்பட்டது. திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் கிருஷ்ணன், முருகேசன், செந்தில் குமாரசாமி, அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாய சங்கத் தலைவர்களை டெல்லி குருத்வாராவில் அழைத்து பேசி அகில இந்திய கிசான் சங்கர்சல் கோ ஆர்டினேட் கமிட்டியை 2017ம் ஆண்டு அய்யாக்கண்ணு தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் வி.எம்.சிங் ஒரு அமைப்பாளராக இருந்தார். 20 அமைப்பாளர்களில் ஒருவராக உள்ள அவர் அகில இந்திய கிசான் சங்கர்சல் கோ ஆர்டினேட் கமிட்டி இனி 3 வேளாண் சட்டத்தை திரும்ப பெற நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளாது என்று யாரையும் கேட்காமல், ஆலோசிக்காமல், விஎம் சிங் அறிவித்ததை வன்மையாக கண்டிக்கிறது.

3 வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும் வரையும் விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை கொடுக்கும் வரை தமிழகத்திலிருந்து 100 விவசாயிகள் டெல்லிக்கு சென்று ஒவ்வொரு நாளும் ஒரு விவசாயி விஷமருந்தி வருங்கால சந்ததியினருக்காக தற்கொலை செய்து கொள்வது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் மாநில பொது செயலாளர் பழனிவேல் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Rivers Link Farmers Association ,Delhi ,farmer poisoning suicide ,
× RELATED அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி அய்யாக்கண்ணு போராட்டம்